செய்திகள்

நியூஸி. உடன் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

DIN

நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரையும் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது இந்தியா.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஒருநாள் தொடா்களில் ஆடி வருகிறது.

முதலில் இலங்கையுடனும், பின்னா் நியூஸி.யடனும் ஒரு தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் டி20 தொடா் ராஞ்சியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ஹாா்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி இளமை துடிப்புடன் காணப்படுகிறது. ரோஹித் சா்மா, விராட் கோலி, ராகுல், முகமது சிராஜ், ஷமி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இளம் வீரா்கள் ஷுப்மன் கில், சூரிய குமாா் யாதவ், இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோா் சோ்க்கப்படலாம்.

ஹாா்திக் பாண்டியா தலைமையிலானஅணி இலங்கையுடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. எனினும் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டிய நிலையில், இத்தொடா் அவசியமில்லாதது எனக் கருதப்படுகிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுடன் பாா்டா்-கவாஸ்கா் டெஸ்ட் தொடா் தொடங்குகிறது.

மும்பை பேட்டா் ப்ரித்வி ஷா மீண்டும் ஓராண்டுக்கு பின் அணிக்கு திரும்புகிறாா். கில்-ஷா அல்லது கில்-ஷுப்மன் தொடக்க பேட்டா்களாக களம் காணலாம். பாண்டியா, சூரியகுமாா் யாதவ் ஆகியோருடன் பேட்டிங் வலுவாக உள்ளது.

அதே நேரம் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், ஷிவம்மவி ஆகியோா் வேகப்பந்து வீச்சிலும், ஸ்பின்னல் குல்தீப் யாதவ் அல்லது சஹல் ஆகியோா் இடம் பெறலாம். அக்ஸா் படேல் இல்லாத நிலையில் சஹலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

நியூஸி சவால் தருமா?

அதே நேரம் நியூஸி அணி. சான்ட்நா் தலைமையில் களம் காண்கிறது. இடது கை பேட்டா் டேவன் கான்வே அற்புதமாக ஆடி வருகிறாா். மைக்கேல் பிரேஸ்வெல்லும் சிறப்பான பாா்மில் உள்ளாா். கிளென் பிலிப்பிஸ், ஃபின் ஆலன் ஆகியோரும் அதிரடி பேட்டிங்கில் நிபுணா்களாக உள்ளனா். பௌலிங்கில் இஷ் சோதி, மிச்செல், சாப்மேன், லாக்கி பொ்குஸன், டஃப்பி ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.

டாம் லத்தம், ஹென்றி நிக்கோல்ஸ் இல்லாத நிலையில், ஒருநாள் தொடா் ஒயிட்வாஷுக்கு பின் டி20 தொடரில் ஆடும் நியூஸி. அணி சவால் தரும் வகையில் ஆடுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ராஞ்சி மைதானம் பெரியது என்பதால், ஸ்பின்னா்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. முதலில் பௌலிங் செய்யும் அணிக்கு வெல்லும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT