செய்திகள்

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இறுதிச்சுற்றுக்குச் செல்ல இந்தியாவுக்கு 108 ரன்கள் இலக்கு!

DIN

நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்றை வெல்ல இந்திய அணிக்கு 108 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்திய மகளிர் அணி. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா. 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. ஜார்ஜியா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். முதல் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணியால் விரைவாக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. பர்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT