செய்திகள்

டேரில் மிட்செல் அதிரடி : இந்தியாவுக்கு 177 ரன்கள் இலக்கு

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 27) ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், நியூசிலாந்து அணி 43 ரன்கள் எடுத்து தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஃபின் ஆலன் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 

அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் சிறிது நிதானமாக விளையாடினாலும் அவர் 22 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் பறிபோக டெவான் கான்வே சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

டெவான் கான்வே உடன் ஜோடி சேர்ந்த டேரி மிட்செல் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். அதிரடியாக விளையாடிய கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

விக்கெட்டுகள் போனாலும் டேரில் மிட்செல் அதிரடியாகவே ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மிட்செல் சாண்ட்னர். ஆனால், அவர் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. அவர் 5 பந்துகளில் 7 ரன்கள் குவித்து ஷிவம் மாவி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதிவரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் அதிரடியாக அரைசதம் கடந்தார். அவர் 30 பந்துகளில் 59 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.   

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT