செய்திகள்

டபிள்யூபிஎல் அணிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

DIN

டபிள்யூபிஎல் அணிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2023 மகளிர் ஐபிஎல் போட்டி இந்த வருடம் முதல் தொடங்கவுள்ளது. இதில் 5 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 

2008-ல் ஆடவர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விடவும் தற்போது அதிகத் தொகை டபிள்யூபிஎல் போட்டிக்குக் கிடைத்துள்ளது. அணிகளின் ஏலம் மூலமாக ரூ. 4669.99 கோடி கிடைத்துள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் டபிள்யூபிஎல் அணிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 2023 டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. ஆமதாபாத் அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் லக்னெள அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ. 951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ. 7.09 கோடி. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் (தொலைக்காட்சி, டிஜிடல்) பொருந்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT