செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் நெ.1 இடம் கிடைக்குமா இந்திய அணிக்கு?

17th Jan 2023 11:18 AM

ADVERTISEMENT

 

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது.

டி20 தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது. ஒருநாள் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். அது நடந்துவிட்டால் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள ஒரே அணி என்கிற பெருமையை இந்திய அணி அடையும். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் இந்திய அணி வென்றது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT