செய்திகள்

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ஒரு மாற்றம்

DIN

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில், காயமடைந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார்.

2020-21-ல் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் மார்ச் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

சர்ஃபராஸ் கானுக்கு விரலில் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற கூடுதல் தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பயிற்சியின்போது விரலில் காயம் ஏற்பட்டதால் இரானி கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார். இந்த வருட ரஞ்சி போட்டியில் 7 ஆட்டங்களில் 46 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் முலானி. இதன் காரணமாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி

மயங்க் அகர்வால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஜெயிஸ்வால், யாஷ் துல், பாபா இந்திரஜித், உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்), அஜித் சேத், செளரப் குமார், ஹர்விக் தேசாய், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், சேதன் சகாரியா, ஆகாஷ் தீப், ஷாம்ஸ் முலானி, புல்கித் நரங், சுதீப் குமார்  கராமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT