செய்திகள்

ஷுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல்?: ரோஹித் சர்மா பதில்

DIN

3-வது டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடுவது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். 

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

ஒரு வருடத்துக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தார் கே.எல். ராகுல். அத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான். (1-2 எனத் தொடரில் தோற்றது இந்தியா.) அடுத்து விளையாடிய சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் மோசமாகவே விளையாடியுள்ளார். கடைசி 10 இன்னிங்ஸில் ஒருமுறையும் 25 ரன்களைக் கூட அவர் தாண்டவிலை. இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் 3-வது டெஸ்டில் ஷுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல் ஆகிய இருவரில் யார் இந்திய அணியில் இடம்பெறுவார் என்கிற கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்ததாவது:

கடினமான தருணத்தை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு அவர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் வழங்கப்படும். துணை கேப்டனாக இல்லாமல் போனாலும் ஒன்றுமில்லை. இதற்கு முன்பு கே.எல். ராகுல் துணை கேப்டனாக இருந்தார். துணை கேப்டன் பதவியைப் பறித்தது எவ்வித செய்தியையும் கூறவில்லை. 

டாஸ் நிகழ்வின்போது அணியில் இடம்பெறும் 11 பேரின் பெயர்களையும் கூற விரும்புகிறேன். ஏனெனில் சிலசமயம் கடைசி நேரத்தில் காயங்கள் ஏற்படலாம். 

எங்கள் அணியில் மேல்வரிசை பேட்டர்களிடமிருந்து நிறைய ரன்கள் வரவில்லை. அடுத்த ஒரு சில ஆட்டங்களில் அவர்கள் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்கலாம். ஷுப்மன் கில்லா கே.எல். ராகுலா எனக் கேட்கிறீர்கள். ஷுப்மன் கில் மட்டுமல்ல இந்திய அணியில் இடம்பெற 17-18 பேரும் போட்டியிடுகிறார்கள் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானம் வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தின விழா

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

குடிநீா் இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து தென்னூரில் போராட்டம்

பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு

SCROLL FOR NEXT