செய்திகள்

நியூசிலாந்தின் வரலாற்று வெற்றியும் மகத்தான புள்ளிவிவரங்களும்!

DIN

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான முறையில் நடைபெற்ற 2-வது டெஸ்டை 1 ரன் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து அணி. ஃபாலோ ஆன் ஆன பிறகு டெஸ்டை வென்ற 4-வது அணி என்கிற சாதனையைப் படைத்ததுடன் சமீபகாலமாக அதிரடியான பேட்டிங்கினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிநடை போட்டு வரும் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி புரட்சி செய்துள்ளது.

2-வது இன்னிங்ஸில் இலக்குக்கு அருகில் சென்று 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை அடைந்தது நியூசிலாந்து அணி. 

இந்த டெஸ்டின் முக்கியமான புள்ளிவிவரத் தொகுப்பு:

* சிட்னி 1894, ஹெடிங்லி 1981, கொல்கத்தா 2001, வெலிங்டன் 2023 என நான்கு டெஸ்டுகளில் மட்டுமே ஃபாலோ ஆன் ஆன அணிகள், மீண்டு வந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்பு இதுபோல நடந்த மூன்றுமுறையும் தோற்ற அணியாக இருந்தது, ஆஸ்திரேலியா. 

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது முறையாக ஓர் அணி, 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 1993 அடிலெய்ட் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 

* முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும் இங்கிலாந்து அணி தோற்றுப் போனது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1961-ல் 177 ரன்கள் முன்னிலை பெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. 

* இந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 226 ரன்கள் பின்தங்கியிருந்தது. முதல் இன்னிங்ஸில் ஓர் அணி அதிக ரன்களுக்குப் பின்தங்கி பிறகு வெற்றி பெற்ற டெஸ்டுகளில் இதற்கு 6-வது இடம். (1992-ல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 291 ரன்கள் பின்தங்கி பிறகு வெற்றி பெற்றது.)

* நியூசிலாந்து அணி முதல்முறையாக 226 ரன்கள் பின்தங்கிய பிறகு ஒரு டெஸ்டில் வெற்றியடைந்துள்ளது. இதற்கு முன்பு 1994-ல் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் பின்தங்கி பிறகு வென்றதே சாதனையாக இருந்தது. 

* அபாரமான வெற்றிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பென் ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் கூட்டணி 2-வது தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 7 டெஸ்டுகளில் இங்கிலாந்து அடைந்த முதல் தோல்வி. கடந்த 6 டெஸ்டுகளிலும் தொடர்ச்சியாக வென்றது இங்கிலாந்து அணி. 2004-ல் தொடர்ச்சியாக எட்டு டெஸ்டுகளில் வென்ற இங்கிலாந்து அணி அதன்பிறகு இருமுறை தலா ஆறு டெஸ்டுகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. 

* 2017 மார்ச்சில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகச் சொந்த மண்ணில் தோற்றது நியூசிலாந்து. அதன்பிறகு சொந்த மண்ணில் விளையாடிய 11 டெஸ்ட் தொடர்களில் ஒரு தொடரிலும் தோற்கவில்லை. 8 தொடர்களை வென்று 3 தொடர்களை டிரா செய்துள்ளது. 8 தொடர்களை வரிசையாக வென்ற நியூசிலாந்து, கடைசியாக விளையாடிய 3 தொடர்களையும் டிரா செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT