செய்திகள்

அப்படி எண்ணியிருந்தால் நான் ஐந்து டெஸ்டுகளில் தான் விளையாடியிருப்பேன்: ஸ்டார்க்

DIN

3-வது டெஸ்டில் விளையாடுவது குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளை வென்று டெஸ்ட் தொடரில் முன்னணியில் உள்ளது இந்திய அணி. 3-வது டெஸ்ட், இந்தூரில் புதன் அன்று தொடங்குகிறது. 

காயம் காரணமாக முதல் இரு டெஸ்டுகளில் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் காயமடைந்ததால் இந்நிலை ஏற்பட்டது. காயம் காரணமாக முதல் இரு டெஸ்டுகளிலும் விளையாடாத ஸ்டார்க், கிரீன் ஆகிய இருவரும் 3-வது டெஸ்டில் விளையாடவுள்ளார்கள். இதையடுத்து 3-வது டெஸ்டில் விளையாடுவது பற்றி ஸ்டார்க் கூறியதாவது:

டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளேன். ஓரளவு அசெளகரியம் இருக்கவே செய்யும். சிறிது காலத்துக்கு 100% செளகரியம் இருக்காது. ஆனால் பந்துவீசும்போது நல்ல உணர்வை அடைகிறேன். உடற்தகுதியில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருகிறேன். ஓரளவு அசெளகரியத்துடன் விளையாடும் முதல் டெஸ்ட் அல்ல இது. உடலில் 100% எவ்வித வலியும், அசெளகரியமும் இல்லாமல் தான் விளையாட வேண்டும் என்றால் நான் இதுவரை ஐந்து அல்லது பத்து டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT