செய்திகள்

பிப்ரவரி 24: மூன்று இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்ட நாள்!

எழில்

கிரிக்கெட் வரலாற்றில் பிப்ரவரி 24 மிக முக்கியமான நாள். இந்த நாளில் மூன்று இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்டு மூன்று சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பிப்ரவரி 24, 2010

இந்த நாளை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.

ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதத்தை அடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்.

குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதத்தை அடித்தார் சச்சின் டெண்டுல்கர். 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் இந்தச் சாதனையை அவர் படைத்தார். 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்த இந்திய அணி அந்த ஆட்டத்தை 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு முன்பு ஜிம்பாப்வேயின் சார்லஸ் கவண்ட்ரியும் பாகிஸ்தானின் சயித் அன்வரும் அடித்த 194 ரன்களே அதிகபட்ச ஒருநாள் ரன்களாக இருந்தன. அந்தச் சாதனையை சச்சின் முறியடித்தார்.

சச்சினுக்குப் பிறகு 9 இரட்டைச் சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்டுள்ளன (அவற்றில் மூன்றை ரோஹித் சர்மா அடித்துள்ளார்). எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுக்கலாம் என பேட்ஸ்மேன்களின் மனத்தில் விதையைத் தூவியது சச்சின் தான். 

பிப்ரவரி 24, 2013

2013-ல் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்தார் தோனி. இதன்மூலம் டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையைப் பெற்றார். 265 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 224 ரன்கள் எடுத்தார் தோனி. 

பிப்ரவரி 24, 2015

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்தார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில். இதன்மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 147 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 215 ரன்கள் எடுத்தார் கெயில். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT