செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி: அனுஸ்துப் சதத்தில் பெங்கால் - 307/4

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் பெங்கால் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று பேட் செய்து வரும் பெங்கால் அணியில் கரன் லால் 23, அபிமன்யு ஈஸ்வரன் 27 ரன்கள் சோ்க்க, சுதிப் குமாா் கராமி 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 112, அனுஸ்துப் மஜும்தாா் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 120 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனா். நாளின் முடிவில் கேப்டன் மனோஜ் திவாரி 5, ஷாபாஸ் அகமது 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மத்திய பிரதேச பௌலிங்கில் அனுபவ் அகா்வால் 2, கௌரவ் யாதவ், ஆவேஷ் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

2-ஆவது அரையிறுதியில் சௌராஷ்டிரத்துக்கு எதிராக ஆடி வரும் கா்நாடகம், முதல் நாளான புதன்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருக்கிறது. ரவிகுமாா் சமரத் 3, தேவ்தத் படிக்கல் 9, நிகின் ஜோஸ் 18, மணீஷ் பாண்டே 7, ஷ்ரேயஸ் கோபால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். கேப்டன் மயங்க் அகா்வால் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 110, ஸ்ரீனிவாஸ் சரத் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். குஷாக் படேல் 2, சேத்தன் சகாரியா, பிரேரக் மன்கட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT