செய்திகள்

ரஞ்சி கோப்பை அரையிறுதி: இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால்

9th Feb 2023 05:52 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தைச் சேர்ந்த மயங்க் அகர்வால், ரஞ்சி கோப்பை அரையிறுதியில் இரட்டைச் சதமெடுத்துள்ளார்.

பெங்களூரில் கர்நாடகம் - செளராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

கர்நாடக அணி முதல் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 110, ஸ்ரீனிவாஸ் ஷரத் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் 2-வது நாளன்று கர்நாடக அணி தனது முதல் இன்னிங்ஸில் 133.3 ஓவர்களில் 407 ரன்கள் எடுத்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 249 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்தப் பருவத்தில் மயங்க் அகர்வால் எடுத்துள்ள 3-வது சதம் இது. 29 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்து தனது அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கியுள்ளார். செளராஷ்டிர அணியின் சேத்தன் சகாரியா, குஷாங் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

ADVERTISEMENT

செளராஷ்டிர அணி 2-வது நாள் முடிவில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT