செய்திகள்

முதல் டெஸ்ட்: ஆரம்பத்தில் தடுமாறி நிலைமையைச் சமாளித்த ஆஸ்திரேலியா!

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களான வார்னர், கவாஜாவை முதல் மூன்று ஓவர்களிலேயே வெளியேற்றினார்கள் சிராஜும் ஷமியும். சிராஜ் வீசிய முதல் பந்திலேயே 1 ரன்னில் கவாஜா ஆட்டமிழந்தார். வார்னரும் 1 ரன்னில் ஷமி பந்தில் போல்ட் ஆனார். இதன்பிறகு ஸ்மித்தும் லபுஷேனும் அபாரமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் இதுவரை 3-வது விக்கெட்டுக்கு 179 பந்துகளில் 74 ரன்கள் எடுத்துள்ளார்கள். 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 47, ஸ்மித் 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT