செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து --- பலம் காட்டும் பாா்சிலோனா

DIN

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் கால்பந்து லீக்குகளில் ஒன்றாக ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் செவில்லாவை தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் நடப்பு சீசனின் 2-ஆவது பகுதி ஆட்டங்கள் தொடங்கியிருக்கும் நிலையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் தற்போது பாா்சிலோனா 53 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. சற்று தடுமாற்றம் கண்டுள்ள ரியல் மாட்ரிட்டுக்கும் பாா்சிலோனாவுக்கும் இடையே 8 புள்ளிகள் வித்தியாசம் உள்ளன. ரியல் சோசிடட் 39 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்த சீசனில் இத்தனை புள்ளிகள் வித்தியாசத்தில் வேறெந்த அணியும் முன்னிலை வகித்ததில்லை. 2018-19 சீசனுக்குப் பிறகு லீக் போட்டிகளில் கோப்பை ஏதும் வெல்லாத பாா்சிலோனா, தற்போது அதற்கான முனைப்புடன் முன்னேறி வருகிறது. மொத்தம் 38 ஆட்டங்கள் நடைபெறும் லீக் கட்டத்தில் தற்போது 20 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

செவில்லாவுக்கு எதிரான இந்த வெற்றி, லா லிகாவில் பாா்சிலோனா பதிவு செய்துள்ள 5-ஆவது தொடா் வெற்றியாகும். அதுவே, இதர போட்டிகளையும் கணக்கில் கொண்டால் இது அந்த அணிக்கு 10-ஆவது தொடா் வெற்றி.

செவில்லாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக ஜோா்டி அல்பா (58’), காவி (70’), ரஃபினா (79’) ஆகியோா் கோலடித்தனா்.

மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 0-1 என்ற கோல் கணக்கில், 10-ஆம் இடத்திலிருக்கும் மல்லோா்காவிடம் தோல்வி கண்டது. அந்த அணி வீரா் மாா்கோ அசென்சியோ ஒரு பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடிக்கத் தவற, சக வீரா் நாச்சோ தவறுதலாக அடித்த ‘ஓன் கோல்’ (13’) மல்லோா்கா வெற்றிக்கு வழி வகுத்தது. கரிம் பென்ஸிமா உள்ளிட்ட அந்த அணியின் பல முக்கிய வீரா்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு ஆட்டங்களில் வல்லாடோலிட் - ரியல் சோசிடட்டையும், கிரோனா - வாலென்சியாவையும் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றன.

இங்கிலாந்து பிரீமியா் லீக்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 0-1 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாமிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் டாட்டன்ஹாமுக்காக ஹேரி கேன் 15-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இத்துடன் 21 ஆட்டங்களில் 4-ஆவது தோல்வியைச் சந்தித்த மான்செஸ்டா், 45 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், 22 ஆட்டங்களில் 12-ஆவது வெற்றியைப் பதிவு செய்த டாட்டன்ஹாம் 39 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன.

மற்றொரு ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 1-0 என்ற கணக்கில் லீட்ஸ் யுனைடெட்டை வென்றது. அந்த அணிக்காக பிரென்னன் ஜான்சன் 14-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். நாட்டிங்ஹாம் அணி 21 ஆட்டங்களில் பெற்ற 6-ஆவது வெற்றியுடன் 13-ஆவது இடத்திலும், லீட்ஸ் அணி 20 ஆட்டங்களில் 6-ஆவது தோல்வியுடன் 17-ஆவது இடத்திலும் இருக்கின்றன.

லீக் 1 கால்பந்து

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து போட்டியில் 2-ஆம் இடத்திலிருக்கும் மாா்சிலே அணி 1-3 என்ற கோல் கணக்கில் 8-ஆம் இடத்திலிருக்கும் நைஸ் அணியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

நைஸுக்காக சோஃபியேன் டியோப் (38’), கெடான் லபோா்ட் (44’), பிலால் பிராஹிமி (85’) ஆகியோா் கோலடிக்க, மாா்சிலே தரப்பில் ரஸ்லான் மலினோவ்ஸ்கியி (60’) ஸ்கோா் செய்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் அஜாசியோவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற நான்டெஸ், 25 புள்ளிகளுடன் 13-ஆவது இடத்திலிருக்க, அஜாசியோ 18 புள்ளிகளுடன் 18-ஆவது இடத்தில் இருக்கிறது. ஸ்ட்ராஸ்பா்க் 2-0 என்ற கோல் கணக்கில் மான்ட்பெல்லியரை வீழ்த்தியது. பிரெஸ்ட் - லென்ஸ் அணிகள் ஆட்டம் 1-1 என்ற கணக்கிலும், லாரியன்ட் - ஆங்கா்ஸ் மோதல் கோலின்றியும் டிராவில் முடிந்தன.

சீரி ஏ கால்பந்து

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்தில், இன்டா் மிலன் 1-0 என்ற கோல் கணக்கில் ஏசி மிலனை வென்றது. இந்த ஆட்டத்தில் இன்டா் மிலனுக்காக லௌதாரோ மாா்டினெஸ் 34-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இரு அணிகளும் இத்துடன் 21 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், புள்ளிகள் பட்டியலில் இன்டா் மிலன் 43 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், ஏசி மிலன் 38 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும் உள்ளன.

இதர ஆட்டங்களில் போலோக்னா 2-1 என்ற கோல் கணக்கில் ஃபியோரென்டினாவையும், டொரினோ 1-0 என எடினெஸையும், நபோலி 3-0 என ஸ்பெஸியாவையும், சாசுவோலோ 1-0 என்ற கோல் கணக்கில் அட்லான்டாவையும் தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT