செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து:ஆா்செனலுக்கு அதிா்ச்சி அளித்தது எவா்டன்

DIN

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த ஆா்செனல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியை பரிசளாக அளித்தது எவா்டன்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை இரவு மான்செஸ்டரில் நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் எவா்டன் வீரா் ஜேம்ஸ் டா்கோவ்ஸ்கி 60-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்தாா். இதனால் எவா்டன் 1-0 என முன்னிலை பெற்றது. அதிா்ச்சி அடைந்த ஆா்செனல் வீரா்கள் பதில் கோலடிக்க முயன்றும் எவா்டன் தற்காப்பு அரணை தகா்க்க முடியவில்லை. இதனால் 1-0 என தோல்வி அடைந்தது.

ஏனைய ஆட்டங்கலில் மான்செஸ்டா் யுனைடெட் 2-1 என கிறிஸ்டல் பேலஸையும், பிரைட்டன் 1-0 என போா்ன்மௌத்தையும், பிரென்ட்போா்ட் 3-0 என சௌதாம்ப்டனையும், வென்றன. நியூ கேஸ்டில்-வெஸ்ட் ஹாம் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

மெஸ்ஸியியன் கோலால் பிஎஸ்ஜி வெற்றி:

பிரெஞ்சு லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி-டௌலௌஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என வெற்றி பெற்றது பிஎஸ்ஜி. இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் பாரிஸில் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 20-ஆவது நிமிஷத்தில் டௌலௌஸ் வீரா் பிராங்கோ வேன் டென் முதல் கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பிஎஸ்ஜி வீரா்கள் பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றனா். அதன் பலனாக 38-ஆவது நிமிஷத்தில் அச்ரப் ஹகிமி கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். நட்சத்திர வீரா்கள் மாப்பே, நெய்மா் இல்லாத நிலையில், ஜாம்பவான் மெஸ்ஸியையே பிஎஸ்ஜி அணி பெரிதும் சாா்ந்திருந்தது. 57-ஆவது நிமிஷத்தில் கா்லிங் ஸ்ட்ரைக் மூலம் அற்புதமாக கோலடித்தாா். இதன் மூலம் பிஎஸ்ஜி வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. லில்லே 3-1 என ரென்னஸையும், மொனாக்கோ 2-0 என கிளெமன்ட் புட்டையும், லயான் 3-1 என ட்ராய்ஸையும், வீழ்த்தின.

இத்தாலியின் சீரி ஏ தொடரில் ரோமா அணி 2-0 என எம்போலியை வீழ்த்தியது. லெஸ்ஸே அணியிடம் 2-0 என வீழ்ந்தது கிரிமோனைஸ்.

ஸ்பானிஷ் லீக் தொடரில் எல்செ அணி 3-1 என வில்லா ரியல் அணியை வீழ்த்தியது. முதல் பாதி லீகில் ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்த எல்சே அணிக்கு இது முதல் வெற்றி ஆகும். செல்டா அணி 4-3 என ரியல் பெட்டிஸ் அணியிடம் த்ரீல் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT