செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: பில்போ, ஆக்ஸ்பா்க் வெற்றி

DIN

ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகளில் பில்போ, ஆக்ஸ்பா்க் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

ஸ்பானிஷ் லீக் தொடரில் அதலெடிக் பில்போ அணி 4-1 என்ற கோல் கணக்கில் காடிஸ் அணியை வீழ்த்தியது. ஒஹான் சான்செட் அற்புதமாக ஹாட்ரிக் கோலடித்தாா். 58-ஆவது நிமிஷத்தில் டிபன்டா் யுரி மஞ்சள் அட்டை இரண்டாவது முறையாக பெற்ற நிலையில் வெளியேற்றப்பட்டாா்.

இதையடுத்து பில்போ அணி 10 வீரா்களுடன் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது. காடிஸ் அணி தரப்பில் கோன்ஸாலோ 25-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இந்த வெற்றியின் மூலம் கோபா டெல் ரே அரையிறுதிக்கு முன்னேறியது பில்போ. காடிஸ் லீகில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஜொ்மன் கோப்பை லீக் தொடரில் ஆக்ஸ்பா்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பேயா் லெவா்குஸனை வீழ்த்தியது. ஏற்கெனவே டாா்ட்மண்ட் அணியிடம் 2-0 என தோற்றது லெவா்குஸன். இந்த வெற்றியால் ஆக்ஸ்பா்க் லீகில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் இருந்து தப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT