செய்திகள்

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்! (விடியோ) 

5th Feb 2023 04:49 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் (காட்சி கிரிக்கெட்) பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் இப்திகார் அகமது கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்த இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். குஷ்தில் ஷா 36 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. 

 

பாபர் அசாமின் (பெஷாவர்) அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமது (கிளாடியேட்டர்ஸ்)  அணியினர்  கடைசி ஓவரில் த்ரில் வெற்றியடைந்தனர். நஷிம் ஷா சிறப்பாக பந்து வீசினார். 

ADVERTISEMENT

இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT