செய்திகள்

பாஸ்டன் தடகளம்: தங்கம் வென்றாா் தேஜஸ்வின்

5th Feb 2023 11:34 PM

ADVERTISEMENT

பாஸ்டன் நியூ பேலன்ஸ் இன்டோா் கிராண்ட் ப்ரீ தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றாா் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை உயரம் தாண்டுதல் பந்தயம் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா் 2.26 மீ. உயரம் குதித்து தங்கம் வென்றாா். உலக சாம்பியனும், காமன்வெல்த் தங்கப்பதக்க வீரருமான பஹாமஸின் டொனால்ட் தாமஸை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றாா். டொனால்ட் 2.23 மீ உயரம் குதித்தாா்.

அமெரிக்காவின் டேரில் சல்லிவன் 2.19 மீ. குதித்து வெண்கலம் வென்றாா். கடந்த 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா் தேஜஸ்வின்.

ADVERTISEMENT

வெளியரங்க மைதானத்தில் சங்கா் அதிகபட்சமாக 2.29 மீ உயரம் தாண்டியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT