செய்திகள்

ஆஸ்திரேலிய அணி ஏன் இப்படி முடிவெடுத்தார்கள்? : சுரேஷ் ரெய்னா

DIN

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து பயிற்சி பெற்று டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்தடைந்து பெங்களூருவில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் போல பந்து வீசும் பரோடா அணியின் மகேஷ் பித்தியா என்ற பந்துவீச்சாளரை வைத்து சுழல் பந்துவீச்சுக்கு எதிரான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து பயிற்சி பெற்று டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

காவலர் குடும்ப நலச் சமூகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மிஷன் ஒலிம்பிக்ஸ் என்ற ஆண்டு விழா தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா பேசியதாவது:  ஆஸ்திரேலிய அணி ஒரு நல்ல வாய்ப்பை இழந்ததாகத் தெரிகிறது. நான் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். அவை மிகவும் முக்கியமானவை. இந்தியாவில் உள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து அறிய வேண்டுமென்றால் அவர்கள் பயிற்சி ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டும். பயிற்சி ஆட்டங்களில் விளையாடினால் மட்டும் தான் அவர்களுக்கு இந்திய ஆடுகளங்களின் தன்மை புரியும். இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். அவரது வருகை இந்திய அணிக்கு பலமாக அமையும். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதனால் இந்த டெஸ்ட் தொடர் சுவாரசியமானதாக இருக்கப் போகிறது.

இந்திய அணி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது ஒரு மிகப் பெரிய சாதனை. பெண்களுக்கான ஐபிஎல் பிரீமியர் லீக்-கினை பிசிசிஐ நடத்தவுள்ளது ஒரு சிறப்பான முடிவு. அதனை நான் வரவேற்கிறேன். இந்த முடிவின் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் பெண்கள் பயனடைவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT