செய்திகள்

தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாடத் தடை!

4th Feb 2023 02:28 PM

ADVERTISEMENT

 

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதால், இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் விளையாட 21 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்புக்கான ஊக்கமருந்துக்கு எதிரான சோதனை நடைமுறைகளை தனியார் நிறுவனமான சர்வதேச பரிசோதனை மையம் சோதனை செய்து வருகிறது. 

அந்தவகையில் 2021 அக்டோபர் 11ஆம் தேதி இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த சோதனை முடிவுகளில் ஹிஜெனமைன் என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது சோதனை மாதிரிகள் எடுத்துக்கொண்ட நாள்களைக் கணக்கிட்டு வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தீபா கர்மாகரின் தடை ஜிம்னாஸ்டிக் துறையில் பேசுபொருளான நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அவர் மீதான தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரிபுராவை சேர்ந்தவர் தீபா கர்மாகர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT