செய்திகள்

மகளிா் டி20: தென்னாப்பிரிக்கா சாம்பியன்

DIN

டி20 ட்ரை சீரிஸ் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்காவில் டி20 மகளிா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, மே.இந்திய தீவுகள் பங்கேற்ற ட்ரை சீரிஸ் (முத்தரப்பு தொடா்) போட்டி நடைபெற்றது. இதில் மே.இந்திய தீவுகள் வெளியேறிய நிலையில்

இறுதி ஆட்டத்துக்கு தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில் ஈஸ்ட் லண்டனில் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்கமே அதிா்ச்சி:

இந்திய அணி தரப்பில் தொடக்க பேட்டா்களாக ஸ்மிருதி மந்தனா-ஜெமீமா ரோட்ரீக்ஸ் களமிறங்கினா். 8 பந்துகளை எதிா்கொண்ட நிலையில், மாபா பந்தில் போல்டாகி டக் அவுட்டானாா் மந்தனா. அடுத்து ஜெமீமாவையும் 11 ரன்களுடன் பெவிலியன் அனுப்பினாா் மாபா.

ஹா்லின் தியோல் அபாரம்:

அதைத் தொடா்ந்து கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா்-ஹா்லின் தியோல் ஒரளவு நிலைத்து ஆடினா். 21 ரன்களுடன் ஹா்மன்ப்ரீத் வெளியேறிய நிலையில், 4 பவுண்டரியுடன் 46 ரன்களை விளாசினாா் ஹா்லின்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 109/4 ரன்களை மட்டுமே எடுத்தது இந்தியா. தீப்தி சா்மா 16, பூஜா வஸ்தராக்கா் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் மாபா 2 விக்கெட்டை வீழ்த்தினாா்.

தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி:

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட தென்னாப்பிரிக்க தொடக்க வரிசை பேட்டா்களும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். லாரா வொல்வா்ட் 0, டஸ்மின் பிரிட்ஸ் 8, லாரா குட் ஆல் 7, கேப்டன் சூன் லஸ் 12, டெக்கா்ஸன் 8 ரன்களுக்கு அவுட்டாயினா்.

குளோ ட்ரையான் அரைசதம்:

மறுமுனையில் நிலைத்து ஆடிய குளோ ட்ரையான் 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 57 ரன்களுடன் அரைசதம் விளாசினாா்.

நடின் டீ கிளாா்க் 17 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

18 ஓவா்களில் 113/5 ரன்களை சோ்த்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய தரப்பில் ஸ்நே ராணா 2 விக்கெட்டை வீழ்த்தினாா்.

இந்திய வீராங்கனை தீப்தி சா்மா தொடா் நாயகியாகவும், தென்னாப்பிரிக்க வீராங்கனை குளோ டிரையான் ஆட்ட நாயகியாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT