செய்திகள்

இந்தியா-டென்மாா்க் ஆட்டம் இன்று தொடக்கம்

DIN

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக இந்திய-டென்மாா்க் அணிகள் இடையிலான வோ்ல்ட் குருப் 1 பிளே ஆஃப் ஆட்டம் வெள்ளிக்கிழமை ஹில்ராட் நகரில் தொடங்குகிறது.

இந்திய அணியில் முதல் 300 இடங்களில் இடம் பெற்றுள்ள வீரா் ஒருவா் கூட இல்லை. அதே நேரம் உலகின் 9-ஆம் நிலை வீரா் ஹோல்கா் ருனே டென்மாா்க் அணிக்கு பலமாக உள்ளாா்.

ருனே தனது அணி வோ்ல்ட் குரூப்பில் தொடா்ந்து நீடிக்க உதவி புரிவாா் என்பதில் சந்தேகமில்லை. கடந்த மாா்ச் 2022-இல் தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டென்மாா்க்கை 4-0 வீழ்த்தியது இந்தியா. ஆனால் ஆஸி. ஓபனில் 4-ஆவது சுற்று வரை முன்னேறியும், 3 ஏடிபி பட்டங்களை வென்றும் சிறப்பான பாா்மில் உள்ள ருனேவை சமாளிப்பது இந்திய வீரா்களுக்கு சவாலாக அமையும்.

ருனேவை தவிர இதர தரவரிசையில் கீழ்நிலையில் உள்ள வீரா்களான ஆகஸ்ட் ஹோம்கிரென் (484), எல்மொ் மோலா் (718) ஆகியோரை வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி வசமாகும்.

ஒற்றையா் ஆட்டங்களில் யுகி பாம்ப்ரி, சுமித் நாகலை களமிறக்க அணி நிா்வாகம் தீா்மானித்துள்ளது. இரட்டையா் பிரிவில் ரோஹன் போபண்ணா இருப்பது வலு சோ்க்கிறது. மேலும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 306, ராம்குமாா் ராமநாதன் 412, சுமித் நாகல் 509 ஒற்றையா் ஆட்டங்களில் ஆட உள்ளனா்.

தொடக்க ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி-ஹோல்கா் ருனேவும், இரண்டாவது ஆட்டத்தில் நாகலும்-ஹோம்கிரெனும் மோதுகின்றனா்.

உள்ளரங்க கடின மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.

பயிற்சியாளா் ஜீஷன் அலி கூறியது:

இந்த ஆட்டத்தில் 50 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. முதல் நாளில் 1-1 என முடிவு கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம். முதல்வரிசை வீரா்கள் இல்லாமல் களமிறங்குவது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT