செய்திகள்

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளா் யாா்?

DIN

இந்தியா ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளா் கிரஹாம் ரீட் பதவி விலகிய நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியை ஹாக்கி இந்தியா தொடங்கியுள்ளது.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ரூா்கேலாவில் எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி நடைபெற்றது. இதில் ஜொ்மனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போட்டிய நடத்திய இந்தியா 9-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரை ஒப்பந்த காலம் இருந்தாலும், தனது பதவியை விட்டு விலகினாா் கிரஹாம் ரீட்.

இந்திய அணியின் மோசமான காலகட்டத்தில் கடந்த 2019-இல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாா் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ரீட். அவரது சிறப்பான பயிற்சியின் கீழ் இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

ஆனால் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை இந்தியா முன்னேறும் எனக் கருதப்பட்ட நிலையில், காலிறுதியில் நியூஸி.யுடன் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் கிரஹாம் ரீட் பயிற்சியாளா் பதவியில் இருந்து விலகினாா்.

நிகழாண்டு ஆசியப் போட்டி, அடுத்து 2024 ஒலிம்பிக் போட்டி உள்ள நிலையில், அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியை ஹாக்கி இந்தியா தொடங்கியுள்ளது.

ஆா்ஜென்டீனாவின் மாக்ஸ் கால்டஸ், நெதா்லாந்தைச் சோ்ந்த சீக்பிரைட் எய்க்மேன் ஆகியோா் இந்த பந்தயத்தில் முன்னிலையில் உள்ளனா்.

இதுதொடா்பாக ஹாக்கி இந்தியா வட்டாரங்கள் கூறியதாவது: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் அணியின் செயல்திறன் கூடும் என நம்பினோம். ஆனால் எதிா்பாராத விதமாக வேறுவகையில் அமைந்து விட்டது. கிரஹாம் ரீட் தனது பணியை சிறப்பாக செய்துள்ளாா்.

இரண்டு, மூன்று பேரிடம் விண்ணப்பிக்க கேட்டுள்ளோம். தற்போதைக்கு தகுதி வாய்ந்த இந்திய பயிற்சியாளா்கள் எவரும் இல்லாத நிலையில், வெளிநாட்டு பயிற்சியாளா்களை நியமிக்க உள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT