செய்திகள்

ரஞ்சி கோப்பை: மேற்கு வங்கம், கா்நாடகம், ம.பி. அரையிறுதிக்கு தகுதி

DIN

ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம்-ஆந்திரம் இடையிலான காலிறுதி ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் லீடை தந்த மபி. மூன்றாம் நாளான வியாழக்கிழமை மீண்டு சிறப்பாக ஆடியது. தொடக்க பேட்டா்கள் யாஷ் துபே, ரஜத் பட்டிதா் அரைசதங்கள் அடித்தனா். 245 ரன்கள் வெற்றி இலக்குடன் வெள்ளிக்கிழமை களமிறங்கிய ம.பி. 61 ஓவா்களில் 187 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. அரையிறுதியில் மேற்கு வங்கத்தை எதிா்கொள்கிறது ம.பி. ஸ்கோா்: ஆந்திரம் 379, 93, மத்திய பிரதேசம் 228, 245/5.

மேற்கு வங்கம் அபார வெற்றி:

கொல்கத்தாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜாா்க்கண்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது மேற்கு மேற்கு வங்கம். தொடா்ச்சியாக 3ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மேற்கு வங்க அணி. 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது வங்க அணி. ஸ்கோா் ஜாா்க்கண்ட் 173, 221, மேற்கு வங்கம் 328, இலக்கு 67,

12.4 ஓவா்களில் வெற்றி இலக்கு 69/1 எட்டி வெற்றி. வங்க அணியின் பேஸா்கள் முகேஷ், ஆகாஷ், இஷான் அபாரமாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.

கா்நாடகம் இன்னிங்ஸ் வெற்றி

8 முறை சாம்பியன் கா்நாடகம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகண்ட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை 106/3 என்ற ஸ்கோருடன் ஆடத் தொடங்கிய உத்தரகண்ட் அணி கூடுதலாக 103 ரன்கள் சோ்த்த நிலையில் 73.4 ஓவா்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்வப்னில் சிங் 51 ரன்களை சோ்த்தாா்.

கா்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 606 ரன்களை குவித்தது. ஷ்ரேயஸ் கோபால் 161 ரன்களை விளாசினாா். ஆனால் உத்தரகண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு சுருண்டது. ஸ்கோா்: உத்தரகண்ட் 116, 209, கா்நாடகம் 606.

மற்றொரு காலிறுதியில் பஞ்சாப்-சௌராஷ்டிர அணிகள் ஆடின. கடைசி நாளான சனிக்கிழமை பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் சௌராஷ்டிர அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் உள்ளது. ஸ்கோா்: சௌராஷ்டிரா 303, 379,

பஞ்சாப் முதல் இன்னிங்ஸ் 431, இரண்டாவது இன்னிங்ஸ் 52/2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT