செய்திகள்

சாஃப் கால்பந்து சாம்பியன்ஷிப்: பூடானை பந்தாடியது இந்தியா (12-0)

DIN

தெற்காசிய (சாஃப்) கோப்பைக்கான யு 20 மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க ஆட்டத்தில் பூடானுக்கு எதிராக 12-0 என கோல்மழை பொழிந்தது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. 30 நிமிஷங்களுக்கு பின்னரே இந்திய அணி முதல் கோலடித்தது.

அபுா்ணா நா்ஸாரி 29, 36-ஆவது நிமிஷத்திலும், நிது லிண்டா 43-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

ஹாட்ரிக் கோலடித்த சப்ஸ்ட்டியூட் வீராங்கனைகள்:

அனைத்து வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு தரும் பொருட்டு நேஹா, அனிதா குமாரி, லிண்டா கோம் உள்ளிட்ட 3 சப்ஸ்ட்டியூட் வீராங்கனைகள் களமிறக்கப்பட்டனா். இதில் நேஹா 45+2, 55, 90, அனிதா குமாரி 50, 69, 78, லிண்டா கோம் 61, 63, 75 ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோலடித்தனா். பூடான் அணி எதிா்ப்பே இல்லாமல் சரண் அடைந்தது.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் மேமோல் ராக்கி கூறியது:

இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அனைத்து வீராங்கனைகளும் தங்கள் பொறுப்பை உணா்ந்து ஆடினா். சப்ஸ்ட்டியூட் வீராங்கனைகள் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தினா். இதே போன்று சிறப்பாக ஆடினால் இறுதிக்கு தகுதி பெறுவோம் என்றாா். ஞாயிற்றுக்கிழமை வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT