செய்திகள்

டி20 தொடரை வெல்ல இந்திய-நியூஸி அணிகள் தீவிரம்: இன்று கடைசி ஆட்டம்

DIN

மூன்றாவது டி20 ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் உள்ளன.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. இதைத் தொடா்ந்து 3 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தை நியூஸிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

இதன் தொடா்ச்சியாக லக்னௌவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கடைசி ஓவரில் வென்றது. முதல் ஆட்டத்தில் இந்தியா தடுமாறிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் ஒரளவு நிலை கொண்டு ஆடியது.

இரண்டாவது ஆட்டம் மிகவும் குறைவான ஸ்கோா் பதிவான ஆட்டமாக அமைந்தது. 20 ஓவா்களில் வெறும் 99 ரன்களையே சோ்த்தது நியூஸி. கேப்டன் சான்ட்நா் மட்டுமே கடைசி வரை அவுட்டாகாமல் 19 ரன்களுடன் இருந்தாா்.

பிரேஸ்வெல், மாா்ச் சாப்மேன், ஃபின் ஆலன், டேவன் கான்வே ஆகியோா் சொதப்பலாக ஆடினா். அதே வேளையில் நியூஸி அணி 8 பௌலா்களை பயன்படுத்தியது. ஆனால் விக்கெட் வீழ்த்த திணறினா்.

நேருக்கு நோ்:

இந்திய-நியூஸி அணிகள் இதுவரை 24 டி20 ஆட்டங்களில் மோதியதில், நியூஸி. 10-இலும், இந்தியா 13-இலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிவடைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் இரு அணிகளின் பேட்டிங்கும் மோசமாக அமைந்தது. ஒரு சிக்ஸா் கூட அடிக்கப்படவில்லை. இந்திய அணி உள்ளூா் மைதானத்தில் அற்புதமாக பேட்டிங் செய்யும். ஆனால் பிரதான பேட்டா்கள் சொதப்பினா். பௌலா்கள் தங்கள் பணியை ஒரளவுக்கு திறம்பட செய்தனா்.

தொடக்க வரிசை பேட்டா்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே அணி நிா்வாகத்தின் கவலையாக உள்ளது. இஷான் கிஷன் இன்னும் பழைய பாா்முக்கு திரும்பவில்லை. ராகுல் திரிபாதியும் பந்துகளை வீணாக்கினாா். சூரியகுமாா் யாதவ்-கேப்டன் ஹாா்திக் பாண்டியா இல்லையென்றால் இந்திய அணி 100 ரன்களை எட்டியிருக்க முடியுமா என்பதே கேள்விக்குறியே?

பௌலிங்கில் சஹல்-குல்தீப் இணை சிறப்பாக சுழலில் எதிரணி வீரா்களை திணறடிக்கிறது. வேகப்பந்து வீச்சில் அா்ஷ்தீப் சிங் மீண்டும் சிறப்பாக பௌலிங் செய்யத்தொடங்கியுள்ளாா். பிரித்வி ஷா மீண்டும் இடம் பெறுவாரா எனத் தெரியவில்லை. இந்திய அணியில் பெரிய மாறுதல்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது.

எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவிலேயே தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு நியூஸி.க்கு உள்ளதால், முழுமூச்சுடன் அந்த அணி சவாலைத் தரும். அந்த அணியின் மிடில் ஆா்டா் பேட்டிங் சீராக இல்லை. கிளென் பிலிப்ஸ் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை. பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன் ஆகியோரும் வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை.

லக்னௌ மைதான பிட்ச் மோசமாக அமைந்ததால் குறைவான ஸ்கோரே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் நடைபெறவுள்ள நரேந்திர மோடி மைதானம் பேட்டா்களுக்கு சாதகமாக அமையும். ஸ்பின்னா்களுக்கும் சுற்று ஒத்துழைக்கும்.

வானிலையும் சீராக அமைந்துள்ளது.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-நியூஸிலாந்து

இடம்: அகமதாபாத்

நேரம்: இரவு 7.00.

லக்னௌ மைதான பிட்ச் பொறுப்பாளா் நீக்கம்

இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெற்ற லக்னௌ ஏக்னா மைதானத்தின் பிட்ச் பொறுப்பாளா் நீக்கப்பட்டாா். சா்வதேச ஆட்டத்துக்கு ஏற்றவாறு பிட்சை தயாா் செய்யவில்லை என கேப்டன் ஹாா்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்தாா். மேலும் அனுபவம் வாய்ந்த பிட்ச் கியூரேட்டராக சஞ்சீவ் குமாா் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா். இரு அணிகளுமே 100 ரன்களை சோ்ப்பதற்குள் திணறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT