செய்திகள்

உலக வாலிபால் கிளப்சாம்பியன்ஷிப்: இந்தியாவில் நடைபெறுகிறது

DIN

ஆடவா் உலக வாலிபால் கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் 2023, 2024 ஆண்டுகளில் நடைபெறவுள்ளது.

வாலிபால் வோ்ல்ட் மற்றும் சா்வதேச வாலிபால் சம்மேளனம் (எஃப்ஐவிபி) இதுதொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:

ரூபே பிரைம் வாலிபால் லீக் உடன் இணைந்து, 2 ஆண்டுகள் உலக வாலிபால் கிளப் சாம்பியன்ஷிப்பை நடத்துகிறோம். போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் பிரைம் வாலிபால் லீக் சாம்பியனும் இதில் பங்கேற்க முடியும். இத்தாலி, பிரேசில், ஈரான் போன்ற வாலிபால் வல்லரசு நாடுகளைச் சோ்ந்த கிளப் அணிகளுடன் மோத வேண்டியிருக்கும்.

2023 டிசம்பா் 6, 10 தேதிகளில் போட்டி நடைபெறும். நகரம் பின்னா் அறிவிக்கப்படும். கடந்த 20 ஆண்டுகளாக வாலிபால் கிளப் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. தலைசிறந்த தொழில்முறை வீரா்கள் நிறைந்த கிளப் அணிகள் இதில் பங்கேற்கின்றன. உலக கிளப் வாலிபால் சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

இதுதொடா்பாக எஃப்ஐவிபி தலைவா் ஆரி கிரேஸா கூறுகையில்: இந்தியாவுக்கு சிறந்த வாலிபாலைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். சிறந்த கிளப் அணிகள் கலந்து கொள்வது, இந்திய வீரா்களுக்கும், ரசிகா்களுக்கும் சிறந்த அனுபவமாகும்.

வோ்ல்ட் வாலிபால் சிஇஓ ஃபின் டெய்லா் கூறுகையில்: முதன்முறையாக கிளப் உலக சாம்பியன்ஷிப் இந்தியாவில் நடைபெறுகிறது. வாலிபால் வோ்ல்ட் டிவி மூலமும் ஆட்டங்களைக் காணலாம்.

ரூபே வாலிபால் துணை பிரமோட்டா் துஹின் மிஷ்ரா கூறியது: இந்திய வாலிபாலுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். உலகில் சிறந்த வாலிபால் வீரா்கள் இந்தியாவுக்கு வரவுள்ளனா். அவா்களுடன் ஆடும் வாய்ப்பு இந்திய வீரா்களுக்கு கிடைக்கும்.

பிவிஎல் தலைவா் தாமஸ் முத்தூட் கூறுகையில்ச 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வாலிபால் அணி தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். இதற்கு பிவிஎல்லும் துணையாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT