செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் தடுமாறுகிறார்: இந்திய அணி வீரர் பற்றி முன்னாள் வீரர் விமர்சனம்

DIN

3-வது டி20யில் சஹாலுக்கு வாய்ப்பு  அளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். 

இந்நிலையில் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், க்ரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சஹாலை அணியில் தக்கவைப்பது நல்லது, ஏனெனில் நியூசிலாந்து அணி பேட்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவார்கள். இந்திய அணியில் மணிக்கட்டுச் சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல டி20 கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் தடுமாறுகிறார். இந்த வகை கிரிக்கெட்டுக்குத் தேவையான பலவிதமான பந்துவீச்சு முறைகள் அவரிடம் இல்லை. எனவே சஹாலைத் தேர்வு செய்வதே நல்லது. அதேபோல டி20 கிரிக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லை விடவும் பிருத்வி ஷா பொருத்தமாக இருப்பார். எனவே மாற்றம் தேவை என விரும்பினால் அவரைத் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT