செய்திகள்

சில நாள்களுக்கு முன்பு என்னை கேலி செய்தவர்கள் தற்போது பாராட்டுகிறார்கள்: ஹாரி புரூக் 

15th Apr 2023 10:36 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை நேற்று வெள்ளிக்கிழமை வென்றது. இதில் முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவிக்க, அடுத்து கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சோ்த்து போராடித் தோற்றது.

ஹாரி புரூக் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 100, ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் 3, வருண் சக்கரவா்த்தி 1 விக்கெட் சாய்த்தனா்.

இந்த ஐபிஎல் போட்டியில் முதல் சதத்தினை பதிவு செய்தவரும் ஹாரி புரூக் ஆவார். இது இவரது முதல் ஐபிஎல் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் விருது வாங்கியப் பிறகு ஹாரி புரூக் கூறியதாவது: 

ADVERTISEMENT

இந்த இரவு சிறப்பானது. பாதி ஆட்டத்தில் மிகவும் படபடப்பாக இருந்தது. நல்ல வேளையாக ஜெயித்து விட்டோம். அதிகமான மக்கள் சொல்வது டி20க்கு தொடக்க ஆட்டம்தான் சிறப்பா இருக்குமென; ஆனால் எனக்கு எந்த இடத்தில் விளையாடினாலும் மகிழ்ச்சிதான். 5வது இடத்தில் இறங்கி நிறைய சாத்தித்திருக்கிறேன். 4 டெஸ்ட் சதங்களும் அங்குதான். சமூக வலைதளங்களில் என்னை குப்பை என்றனர். அதனால் எனக்கு நானே சிறிது அழுத்தம் கொடுத்துக் கொண்டேன். இப்போது என்னை பாராட்டும் பல இந்திய ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்பு என்னை அசிங்கப்படுத்தியவர்கள்தான். நல்லவேளையாக அவர்கள் வாயை நியாயமாக அடைத்துவிட்டேன். 

ADVERTISEMENT
ADVERTISEMENT