செய்திகள்

இன்றும் தோல்வி: தில்லி கேபிடல்ஸை வீழ்த்திய பெங்களூரு அணி

15th Apr 2023 07:10 PM

ADVERTISEMENT

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் தில்லி அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது தில்லி  கேப்பிடல்ஸ். இதனையடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. அந்த அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது தில்லி கேப்பிடல்ஸ். அந்த அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் என இருவருமே 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய யஷ் துல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேப்டன் டேவிட் வார்னர் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மணிஷ் பாண்டே 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் களமிறங்கியவர்களில்  அக்சர் பட்டேல் தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்மூலம், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணிக்கு கிடைக்கும் இரண்டாவது வெற்றியாகும். தில்லி கேப்பிடல்ஸ் இன்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன்  மூலம் தொடர்ச்சியாக 5-வது தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT