செய்திகள்

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை: அறிவிப்பு

DIN

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன. முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகளும் போட்டியிடவுள்ளன. 

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 1.6 மில்லியன் டாலர் வழங்கப்படும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 13.02 கோடி. 2-ம் இடம் வருகிற அணிக்கு இந்தத் தொகையில் பாதி கிடைக்கும். அதாவது ரூ. 6.51 கோடி. அரையிறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ. 3.26 கோடி பெறவுள்ளன. சூப்பர் 12 சுற்றிலிருந்து வெளியேறும் 8 அணிகளும் தலா ரூ. 57 லட்சம் பெறவுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ. 45.61 கோடி என ஐசிசி அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT