செய்திகள்

பொன்னியின் செல்வன் எங்கு ஓடுகிறது?: அஸ்வின் கேள்வி

30th Sep 2022 04:45 PM

ADVERTISEMENT

 

குவாஹாட்டியில் பொன்னியின் செல்வன் படம் எங்குத் திரையிடப்பட்டுள்ளது என்கிற தகவலைத் தெரிவிக்குமாறு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் பிரபல வீரர் ஆர். அஸ்வின்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். முதல் ஆட்டத்தில் விளையாடிய அஸ்வின், அருமையாகப் பந்துவீசினார். டி20 தொடரின் 2-வது ஆட்டம் குவாஹாட்டியில் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. 

மணி ரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகராகிய அஸ்வின் அந்தப் படத்தைக் காண ஆவலாக உள்ளார். டி20 தொடருக்காக குவாஹாட்டியில் இருப்பதால் பொன்னியின் செல்வன் படம் அங்கு எந்தத் திரையரங்கில் தமிழில் திரையிடப்பட்டுள்ளது என்கிற கேள்வியை ட்விட்டரில் எழுப்பினார் அஸ்வின். 

ADVERTISEMENT

குவாஹாட்டி சென்ட்ரல் மாலில் உள்ள சினிபொலிஸ் திரையரங்கில் மதியம் ஒரு மணி காட்சியில் தமிழ் பொன்னியின் செல்வன் திரையிடப்படுவதாக ஒரு ரசிகர் பதில் அளித்தார். அது பயிற்சிக்கான நேரம். இன்னும் அதிகக் காட்சிகளுக்குத் திரையிட்டிருக்கலாம் எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அஸ்வின். பயிற்சியைக் கைவிடுங்கள். பயிற்சியாளரிடமிருந்து அனுமதி வாங்கித் தருகிறேன் என அந்த ரசிகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். இதற்கு மூன்று ஸ்மைலிகளைப் பதிலாக அளித்தார் அஸ்வின். 

பொன்னியின் செல்வன் நாவலின் கதை, அதன் கதாபாத்திரங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து விடியோக்களை வெளியிட்டு வருகிறார் அஸ்வின். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT