செய்திகள்

யார் மீதாவது கோபப்பட்டால் மட்டுமே இதைச் செய்வேன்: மொயீன் அலி

29th Sep 2022 01:27 PM

ADVERTISEMENT

 

எந்த வீரர் மீதாவது கோபப்பட்டால் தான் பந்துவீச்சாளர் பக்கமுள்ள பேட்டரை ரன் அவுட் செய்வேன் என இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பிரபல இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறியதாவது:

ADVERTISEMENT

இது எனக்கானது அல்ல. யார் மீதாவது பயங்கர கோபம் இருந்தாலொழிய யாரையும் இந்த முறையில் ரன்  அவுட் செய்ய மாட்டேன். இது ஐசிசியின் விதிமுறையில் உள்ளது. இதில் முறைகேடு எதுவும் இல்லை. எனவே இதைச் செய்பவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இது வழக்கமான ஒன்றாக மாறக் கூடாது. இந்த முறையில் விக்கெட் எடுக்க நாம் மெனக்கெடுவதில்லை. ரன் அவுட்டிலாவது கொஞ்சம் உழைப்பு உள்ளது. அதேபோலத்தான் இதர விக்கெட் எடுக்கும் முறைகளிலும். பேட்டர் எப்போது கிரீஸை விட்டு வெளியேறுவார் எனத் தெரிந்து ஆட்டமிழக்கச் செய்வது இது. சிறுவயதில் கிரிக்கெட் விளையாடியபோதும் இதுபோலச் செய்ததில்லை என்றார். 

Tags : Moeen Ali
ADVERTISEMENT
ADVERTISEMENT