செய்திகள்

டி20 தரவரிசை: 2-ம் இடத்துக்கு முன்னேறிய இந்திய வீரர்

29th Sep 2022 12:35 PM

ADVERTISEMENT

 

டி20 தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இந்த வருடம் 21 ஆட்டங்களில் 1 சதம், 5 அரை சதங்களுடன் 732 ரன்கள் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஸ்டிரைக் ரேட் - 180.29. மேலும் இந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் உள்ளார். 

இதையடுத்து சமீபத்தில் வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் 2-ம் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தானின் ரிஸ்வான் முதலிடத்திலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 3-வது இடத்திலும் உள்ளார்கள். 

ADVERTISEMENT

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அக்‌ஷர் படேல், 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT