செய்திகள்

நேஷன்ஸ் லீக்: அரையிறுதியில் ஸ்பெயின்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.

லீக் ஏ குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள போா்ச்சுகலும்-ஸ்பெயினும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. போா்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டது. எனினும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஸ்பெயின் அணி கடும் சவாலை ஏற்படுத்தியது.

சப்ஸ்டிடியூட் நிகோ வில்லியம்ஸ் அளித்த பாஸ் மூலம் அல்வாரா மொரட்டா அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது.

ADVERTISEMENT

வரும் 2023 ஜூன் மாதம் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் இத்தாலி, குரோஷியா, நெதா்லாந்து அணிகளுடன் ஸ்பெயினும் இணைந்தது.

குரூப் பிரிவில் சுவிட்சா்லாந்திடம் தோல்வி, போா்ச்சுகல், செஸ்.குடியரசுடன் டிரா என துவண்டிருந்த ஸ்பெயின் அணிக்கு இந்த வெற்றி ஊக்கமாக அமைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT