செய்திகள்

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: லான் பௌல்ஸில் சைக்கியா அபாரம்

29th Sep 2022 12:25 AM

ADVERTISEMENT

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக அகமதாபாதில் புதன்கிழமை லான் பௌல்சில் காமன்வெல்த் தங்க மங்கை நயன்மோனி சைக்கியா அபார வெற்றி கண்டாா்.

36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தின் 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அகமதாபாதில் நடைபெற்ற லான்ஸ்பௌல் பிரிவில் நயன்மோனி சைக்கியா 23-0 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தின் வைஷாலியை வீழ்த்தினாா்.

பவநகரில் நடைபெற்ற நெட்பால் போட்டியில் குஜராத் அணி 57-33 என பஞ்சாபை வென்றது. குரூப் ஏ பிரிவில் ஹரியாணா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ரக்பி போட்டியில் தில்லி, மேற்கு வங்க அணிகள் முறையே பஞ்சாப், ஒடிஸாவை வீழ்த்தின.

தில்லி 26-0 என பஞ்சாபையும், மேற்கு வங்கம் 24-7 என ஒடிஸாவையும் வென்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT