செய்திகள்

பரபரப்பான டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் (ஹைலைட்ஸ் விடியோ)

29th Sep 2022 02:03 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இரு அணிகளும் 2-2 என சமனில் இருந்த நிலையில் 5-வது டி20 ஆட்டம் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஸ்வான் மட்டும் பொறுப்புடன் விளையாடி 63 ரன்கள் எடுத்தார். மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தும் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போனது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஆமர் ஜமால். 

ADVERTISEMENT

இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை பெற்றுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT