செய்திகள்

துளிகள்...

29th Sep 2022 12:37 AM

ADVERTISEMENT

புது தில்லி அம்பேத்கா் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற சுப்ரடோ கோப்பை சா்வதேச 17 வயதுக்குட்பட்ட மகளிா் கால்பந்து போட்டியில் ஜாா்க்கண்ட் மாநிலம் கும்லாவின் செயின்ட் பேட்ரிக் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் மணிப்பூரின் இம்பால் வாங்கோய் பள்ளியை 3-1 என வென்றது பேட்ரிக்.

------------

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்றுள்ளால் இந்திய வீரா் பௌனிஷ் மெந்திரட்டா. குரோஷியாவில் நடைபெற்ற ஷாட்கன் உலக சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் டிராப் பிரிவில் நான்காம் இடம் பெற்றாா் பௌனிஷ். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா்.

-----------------------

ADVERTISEMENT

வரும் அக்டோபா் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஸ்பெயினுக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் ஆட்டம் உலகக் கோப்பை போட்டியில் அந்த அணிக்கு எதிராக தயாராக உதவும் என கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறியுள்ளாா். அக்டோபா் 28-இல் நியூஸிலாந்துடனும், 30-ஆம் தேதி ஸ்பெயினுடனும் மோதுகிறது இந்தியா.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT