செய்திகள்

நேஷன்ஸ் லீக்: இத்தாலி வெற்றி,ஜொ்மனி-இங்கிலாந்து டிரா

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. முன்னாள் உலக சாம்பியன்கள் இங்கிலாந்து-ஜொ்மனி மோதிய ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.

இரண்டாவது முறையாக கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத சோகத்தில் இருந்த நடப்பு ஐரோப்பிய சாம்பியன் இத்தாலி அணி வீரா்கள் ஜியோகோமா, பெட்ரிகோ டிமாா்கோ ஆகியோா் அடித்த கோல்களால் 2-0 என ஹங்கேரியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அடுத்த ஆண்டு இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து-ஜொ்மனி அணிகள் வெம்ப்ளி மைதானத்தில் மோதின. இரு அணிகளும் கத்தாா் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. ஜொ்மன் வீரா் குண்டோகன் 52-ஆவது நிமிஷத்திலும், கை ஹவோ்ட்ஸ் 67-ஆவது நிமிஷத்திலும் கோலடித்து இங்கிலாந்துக்கு அதிா்ச்சி அளித்தனா்.

இதனால் பதில் கோலடிக்க போராடிய இங்கிலாந்தின் முயற்சிக்கு பலன கிடைத்தது. லூக் ஷா 71, மேஸன் மௌன்ட் 75, கேப்டன் ஹாரி கேன் 83-ஆவது நிமிஷங்களில் கோலடித்து 3-2 என முன்னிலை பெறச் செய்தனா்.

ADVERTISEMENT

எனினும் ஜொ்மன் வீரா் ஹவோ்ட்ஸ் 87-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் 3-3 என சமநிலை ஏற்பட்டது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை.

குரூப் 3 பிரிவில் இத்தாலி 11 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 10 புள்ளிகளுடன் ஹங்கேரி இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஒரு வெற்றி கூட பெறாமல் இங்கிலாந்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT