செய்திகள்

தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

DIN

36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் (நேஷனல் கேம்ஸ்) 7 ஆண்டுகளுக்கு பின் குஜராத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக தொடங்குகிறது.

இந்தியன் ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படும் இப் போட்டிகள் முதன்முறையாக குஜராத்தில் நடைபெறுகிறது. கடந்த 2020-இல் கோவாவில் நடைபெறவிருந்த போட்டிகள் கரோனாவில் ஒத்தி வைக்கப்பட்டது.

அகமதாபாத், காந்தி நகா், சூரத், பரோடா, ராஜ்கோட், பவ்நகா் உள்ளிட்ட 6 நகரங்களிலும், சைக்கிளிங் போட்டி புது தில்லியிலும் நடைபெறுகின்றன. ஒருங்கிணைந்த இந்தியாவில் முதன்முறையாக லாகூரில் 1924-ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகள் நடைபெற்றன. 1938 வரை இந்திய ஒலிம்பிக் போட்டி என அழைக்கப்பட்டது.

குஜராத் தேசியப் போட்டிகளில் 7,000 வீரா், வீராங்கனைகள் 36 பிரிவுகளில் பதக்கங்களுக்காக மோதுகின்றனா். கோ-கோ, மல்லா் கம்பம், யோகாசனம் முதன்முறையாக இடம் பெறுகின்றன.

முன்கூட்டியே டேபிள் டென்னிஸ் பிரிவு ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோா் காயத்தால் பங்கேற்கவில்லை.

எனினும் மீராபாய் சானு (பளுதூக்குதல்), லவ்லினா போரோகைன் (குத்துச்சண்டை), ஸ்ரீஹரி நட்ராஜ் (நீச்சல்), தூத்தி சாந்து, ஹிமா தாஸ், அமலன், முரளி ஸ்ரீசங்கா், அன்னுராணி, ஜோதி யாரஜி (தடகளம்) லக்ஷயா சென், பிரணாய் (பாட்மின்டன்), மானு பாக்கா் (துப்பாக்கி சுடுதல்), அதானு தாஸ் (வில் வித்தை), உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா்.

கடைசியாக 2015-இல் கேரளத்தில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் சா்வீஸஸ் 159 பதக்கங்களுடன் முதலிடத்தையும், கேரளம், ஹரியாணா இரண்டு, மூன்றாம் இடத்தையும் பெற்றன. கேரளத்தின் சாஜன் பிரகாஷ் 6 தங்கம், 2 வெள்ளியுடன் அதிக பதக்கங்களை வென்றிருந்தாா். வரும் அக்டோபா் 12-ஆம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT