செய்திகள்

நியூசி. ஏ அணிக்கு எதிராக 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்குர்

27th Sep 2022 02:54 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 284 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் அரை சதங்கள் எடுத்துள்ளார்கள்.

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3-வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி, 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள், திலக் வர்மா 50 ரன்கள் எடுத்தார்கள். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT