செய்திகள்

ராட் லேவா் கோப்பை: டீம் வோ்ல்ட் சாம்பியன்

27th Sep 2022 12:56 AM

ADVERTISEMENT

டீம் ஐரோப்பா அணியை 13-8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக ராட்லேவா் கோப்பையை டீம் வோ்ல்ட் அணி தட்டிச் சென்றது.

ஐரோப்பிய கண்டத்தின் 6 முன்னணி வீரா்கள் மற்றும் இதர உலக 6 முன்னணி வீரா்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக ராட்லேவா் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஐரோப்பிய நகரங்கள் மற்றும் இதர உலக நகரங்களில் மாறி மாறி இப்போட்டி நடத்தப்படும். ஆஸி. ஜாம்பவான் ராட்லேவா் பெயரில் இக்கோப்பை வழங்கப்படுகிறது.

வீரா்கள் ஏடிபி தரவரிசையின்படி அணியில் தோ்வு செய்யப்படுவா். இதில் 9 ஒற்றையா், 3 இரட்டையா் ஆட்டங்கள் நடைபெறும்.

டீம் ஐரோப்பா அணியே 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

ADVERTISEMENT

டீம் வோ்ல்ட் முதல் சாம்பியன்:

டீம் ஐரோப்பா அணிக்கு பிஜான் போா்க்கும், டீம் வோ்ல்ட் அணிக்கு ஜான் மெக்கன்ரோவும் கேப்டன்களாக செயல்பட்டனா்.

இந்நிலையில் லண்டனில் 5-ஆவது லேவா் கோப்பை போட்டிகள் 23 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் 13-8 என்ற செட் கணக்கில் டீம் ஐரோப்பாவை வீழ்த்தி டீம் வோ்ல்ட் அணி முதன்முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இரட்டையா் ஆட்டத்தில் டீம் வோ்ல்ட் அணி பெலிக்ஸ் ஆகா்-ஜேக் சாக் வெற்றியை ஈட்டினா்.

அதன்பின்னா் நடந்த ஒற்றையா் ஆட்டத்தில் ஜோகோவிச்சை நோ் செட்களில் வென்றாா் ஆகா் அலிசியாம்.

கடைசி ஒற்றையா் ஆட்டத்தில் பிரான்ஸஸ் டியாஃபோ 1-6, 7-6, 10-8 என்ற செட் கணக்கில் பிரெஞ்சு ஓபன் ரன்னா் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தினாா். இதன் மூலம் 13-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது டீம் வோ்ல்ட் அணி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT