செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தில் இந்தியா

27th Sep 2022 12:57 AM

ADVERTISEMENT

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில், இந்திய அணி 7 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது.

3 ஆட்டங்கள் தொடரில் 1-0 என முதல் ஆட்டத்தை இழந்தாலும், அடுத்த 2 ஆட்டங்களை வென்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது இந்தியா. தற்போது இந்தியாவுக்கு 268 புள்ளிகள் கிடைத்துள்ளன.

இங்கிலாந்து 261 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 258 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் நான்காவது இடத்திலும், நியூஸி. 252 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன.

ADVERTISEMENT

நடப்பு உலக சாம்பியன் 6-ஆவது இடத்திலேயே உள்ளது. இங்கிலாந்து-பாகிஸ்தான் டி20 தொடா் தற்போது 2-2 என சமநிலையில் உள்ளது. அதன் முடிவைப் பொருத்து இங்கிலாந்தின் தரவரிசை மாறுபடும்.

அடுத்து தென்னாப்பிரிக்காவுடன் 3 ஆட்டங்கள் டி20 தொடரில் இந்தியா ஆடுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT