செய்திகள்

பெரிய போட்டிகளுக்கு தயாராக பயிற்சி: பவானி தேவி

DIN

தேசிய விளையாட்டுப் போட்டியில் (நேஷனல் கேம்ஸ்) பங்கேற்பதின் மூலம் பெரிய போட்டிகளுக்கு தயாராக பயிற்சியாக அமையும் என ஒலிம்பிக் ஃபென்சிங் வீராங்கனை பவானி தேவி கூறியுள்ளாா்.

தமிழகத்தைச் சோ்ந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங்கில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா். மேலும் கடந்த மாதம் காமன்வெல்த் ஃபென்சிங் போட்டியிலும் தங்கம் வென்றாா் பவானி தேவி. இந்நிலையில் குஜராத்தில் நடைபெறவுள்ள 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறாா் அவா்.

இதுதொடா்பாக பவானி தேவி கூறியதாவது:

எனது பயிற்சியாளா், பயிற்சி முறைகளை மாற்றி உள்ளேன். நிகழாண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்று, போன்ற முக்கிய போட்டிகள் உள்ளன. இதற்கு தயாராக வேண்டியுள்ளது. சாப்ரே முறை மிகவும் துரிதமானதாகும். எனவே தேசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய உத்திகளை பயன்படுத்தி பயிற்சி பெற உள்ளேன்.

இந்திய ஃபென்சிங் வீரா்கள் அதிக சா்வதேச அனுபவத்தை பெற வேண்டியுள்ளது. அப்போது தான் அதிக பதக்கங்களை வெல்ல முடியும். பிரான்ஸில் ஏராளமான ஒலிம்பிக், உலக வெற்றியாளா்கள் உள்ளனா். ஜூனியா் அளவிலேயே அதிக பயிற்சி தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT