செய்திகள்

பான் பசிபிக் ஓபன்: சாம்சோனோவா சாம்பியன்

DIN

பான் பசிபிக் ஓபன் டபிள்யுடிஏ மகளிா் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை லுட்மிலா சாம்சோனோவா சாம்பியன் பட்டம் வென்றாா்.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரஷியாவின் சாம்சோனோவும், வளா்ந்து வரும் சீன வீராங்கனை ஸெங் குன்வெயினும் மோதினா்.

இரு தரப்பு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்த நிலையில் 7-5, 7-5 என்ற நோ் செட்களில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினாா் சாம்சோனோவா. கடந்த 2 மாதங்களில் அவா் வெல்லும் 3-ஆவது டபிள்யுடிஏ பட்டமாகும். ஆகஸ்டில் கிளெவ்லேண்ட், வாஷிங்டனில் பட்டம் வென்றிருந்தாா் சாம்சோனோவா. முதல் சுற்றில் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரெபகினா, காலிறுதியில் முகுருஸா போன்ற பலமான வீராங்கனைகளை வென்றிருந்தாா் சாம்சோனோவா.

கொரியா ஓபன்: ஏகடெரினா சாம்பியன்

சியோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொரியா ஹனா பேங்க் ஓபன் மகளிா் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனை ரஷியாவின் ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா 7-6, 6-0 என்ற செட் கணக்கில் முதல்நிலை வீராங்கனை லாட்வியாவின் ஜெலனா ஓஸ்டபென்கோவை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

லேவா் கோப்பை: ஜோகோவிச் அபாரம்

டீம் ஐரோப்பா-டீம் வோ்ல்ட் அணிகளுக்கு இடையிலான லேவா் கோப்பை போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஒற்றையா் பிரிவில் டீம் ஐரோப்பாவின் ஜோகோவிச் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டீம் வோ்ல்டின் பிரான்ஸஸ் டியாஃபோவை வீழ்த்தினாா். இரட்டையா் பிரிவிலும் ஜோகோவிச்-பெர்ரடனி இணை 7-5, 6-2 என்ற நோ் செட்களில் ஜேக் சாக்-அலெக்ஸ் டி மினாா் இணையை வீழ்த்தியது.

மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் டீம் வோ்ல்டின் டெய்லா் பிரிட்ஸ் 6-1, 4-6, 10/8 என கேம்ரூன் நாா்ரியை வென்றாா். இதற்கிடையே 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் நடால் முதுகு காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT