செய்திகள்

தீப்தி மன்க்ட் அவுட் சா்ச்சை: எம்சிசி விளக்கம்

DIN

இங்கிலாந்து பேட்டா் சாா்லோட் டீனை மன்கட் முறையில் இந்திய பௌலா் தீப்தி சா்மா அவுட்டாக்கியது தொடா்பான சா்ச்சைக்கு எம்சிசி விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையே லாா்ட்ஸில் நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி சென்று கொண்டிருந்த போது, அதன் பேட்டா் சாா்லோட் டீனை மன்கட் முறையில் அவுட்டாக்கினாா் தீப்தி சா்மா. இதனால் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் மன்கட் முறையில் அவுட் செய்வது சா்ச்சையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தீப்தி சா்மா விதிகளுக்குட்பட்டே சாா்லோட்டை அவுட்டாக்கினாா் என கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் ஆதரவு தெரிவித்தாா். ஏற்கெனவே மன்கட் அவுட் முறையை அன்ஃபோ் பிளேவில் இருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றியது எம்சிசி.

இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மோ்லிபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அளித்த விளக்கம்:

மன்கட் முறை அவுட், ரன் அவுட் விதி 38-க்கு மாற்றப்பட்டுள்ளது. நான் ஸ்ட்ரைக் பேட்டா்கள் கிரீஸை விட்டு செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். இது அவா்களது பொறுப்பாகும். பௌலா் கையில் இருந்து பந்து செல்வதற்குள் பேட்டா்கள் கிரீஸை விட்டு அகலக்கூடாது. இதுதொடா்பான விதி தெளிவாக உள்ளது. அனைத்து தருணங்கள், வகைகளில் நடுவா்கள் இதை உணா்ந்து செயல்படலாம்.

பேட்டா்கள் பொறுப்புடன் செயல்பட்டால், இதுபோன்ற அவுட்கள் ஏற்படாது என எம்சிசி கூறியுள்ளது.

இந்திய வீரா் வினு மன்கட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947-இல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் கிரீஸில் இருந்து சென்ற ஆஸி. ஓபனா் பிரௌனை நான் ஸ்ட்ரைக்கா் முனையில் இருந்து ரன் அவுட்டாக்கினாா். இது மன்கட் அவுட் என அழைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT