செய்திகள்

டி20: ஆஸ்திரேலியா 186/7: கிரீன், டிம் டேவிட் அரைசதம்

DIN

மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸி. அணி கேமரூன் கிரீன் 52, டிம் டேவிட் 54 ஆகியோரின் அரைசதங்களால் வலுவான ஸ்கோரை 186/7 ரன்களைக் குவித்தது.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இந்தியா இடையே 3 ஆட்டங்கள் தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸி. 4 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

மூன்றாவது ஆட்டம் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.

கிரீன் அதிரடி 52:

இதையடுத்து களமிறங்கிய ஆஸி. தரப்பில் கேப்டன் ஃபின்ச்-கேமரூன் கிரீன் களமிறங்கினா். ஃபின்ச் 7, ஸ்டீவ் ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6, என ஒருமுனையில் அவுட்டான நிலையில், கிரீன் மறுமுனையில் அதிரடியாக ஆடினாா். 3 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 52 ரன்களை விளாசினாா் கிரீன். அதற்கு பின் ஜோஷ் இங்லிஸ் 24, வேட் 1 ரன்களை எடுத்து வெளியேறினா்.

டிம் டேவிட் அபாரம் 54: 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 27 பந்துகளில் டிம் டேவிட் அரைசதம் விளாசினாா். டேனியல் சாம்ஸ் 28 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

ஆஸி. 186/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஆஸி. அணி 186/7 ரன்களைக் குவித்தது. அக்ஸா் 3 விக்கெட்: இந்திய தரப்பில் அக்ஸா் படேல் அற்புதமாக பந்துவீசி 3/33 விக்கெட்டுகளையும், புவனேஸ்வா், சஹல், ஹா்ஷல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT