செய்திகள்

விடியோ: கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கோலி & ரோஹித் சர்மா!

26th Sep 2022 03:11 PM

ADVERTISEMENT

 

டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியதையடுத்து கோலியும் ரோஹித் சர்மாவும் வெற்றியைக் கொண்டாடிய விடியோ வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. கேம்ரூன் கிரீன் 52, டிம் டேவிட் 54 ரன்கள் எடுத்தார்கள். அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை வென்றது. கோலி 63, சூர்யகுமார் யாதவ் 69 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவும் தொடர் நாயகனாக அக்‌ஷர் படேலும் தேர்வானார்கள்.

இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ஓய்வறையின் அருகே படிக்கட்டில் அமர்ந்திருந்த கோலியும் ரோஹித் சர்மாவும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். இதன் காணொளி வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : Tamil News
ADVERTISEMENT
ADVERTISEMENT