செய்திகள்

பலமுறை எச்சரித்த பிறகே ரன் அவுட் செய்தோம்: தீப்தி சர்மா பேட்டி

26th Sep 2022 01:49 PM

ADVERTISEMENT

 

ரன் அவுட் செய்வதற்கு முன்பு இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனைப் பலமுறை எச்சரிக்கை செய்தோம் என இந்திய வீராங்கனை தீப்தி சர்மா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. நடுவர்  அவுட் எனத் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறியுள்ளார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய தீப்தி சர்மா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சார்லி டீன் விவகாரம் பற்றி கூறியதாவது:

ADVERTISEMENT

சார்லி டீன் பந்துவீசும் முன்பு அடிக்கடி கிரீஸை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவரைப் பலமுறை எச்சரித்தோம். பிறகு நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். அதற்குப் பிறகும் அவர் அப்படிச் செய்ததால் விதிமுறைப்படி ரன் அவுட் செய்தோம் என்று கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT