செய்திகள்

டி20யில் அதிக வெற்றிகள்: விராட் கோலியை முந்திய ரோஹித் சர்மா!

26th Sep 2022 04:14 PM

ADVERTISEMENT

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

ஆஸி. அணிக்கு எதிராக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் ரோஹித் சர்மா 42 போட்டிகளில் தலைமை தாங்கி 33 போட்டிகள் வென்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தலைமையில் 50 போட்டிகளில் 32 போட்டிகள் வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். எம்.எஸ்.தோனி 72 போட்டிகளில் தலைமை தாங்கி 42 போட்டிகள் வென்று முதலிடத்தில் இருக்கிறார். 

  1. எம்.எஸ். தோனி - 42 வெற்றிகள் 
  2. ரோஹித் சர்மா - 33 வெற்றிகள் 
  3. விராட் கோலி -  32 வெற்றிகள் 

மேலும், ரோஹித் சர்மா வெற்றி சதவிகிதத்திலும் இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் இரண்டாமிடமும் பிடித்துள்ளார். முதல் இடம் 80.39 சதவிகிதத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்கர் இருக்கிறார். ரோகித் 78.57 சதவிகித்த்துடன் இரண்டாமிடம். சர்ப்ராஸ் அஹமது மூன்றாவது இடம். விராட் கோலி இதில் 5வது இடம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT